தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்றாவது நாளாக பற்றி எரியும் பீகார்- ரயிலுக்கு தீ வைப்பு

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் இளைஞர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து ரயில் பாதையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாவது நாளாக பற்றி எரியும் பிகார்- ரயிலுக்கு தீ வைப்பு
மூன்றாவது நாளாக பற்றி எரியும் பிகார்- ரயிலுக்கு தீ வைப்பு

By

Published : Jun 17, 2022, 10:32 AM IST

Updated : Jun 17, 2022, 12:03 PM IST

பீகார்: அரசின் புதிய திட்டமான அக்னிபாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பீகார் மாநிலத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கிசராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகளை எரித்தனர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாயன்று வெளியிட்ட அக்னிபாத் திட்டம் மூலம் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இத்திட்டம் சம்பளம் மற்றும் ஓய்வூதிய மசோதாவைக் குறைக்கும் நோக்கத்துடன் வீரர்களை தேர்ந்தெடுப்பதாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி-கொல்கத்தா பிரதான ரயில் பாதையில் மறியலில் ஈடுபட்டதால் பல ரயில்கள் தாமதமாக சென்றன. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அதிகாலை 5 மணி முதல் மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக பற்றி எரியும் பிகார்- ரயிலுக்கு தீ வைப்பு

இதையும் படிங்க:அக்னிபாத்துக்கு வலுத்த எதிர்ப்பு - வயது வரம்பு அதிகரிப்பு

Last Updated : Jun 17, 2022, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details