தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம் - பாஜக தலைவர் கைது! - ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம்

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம்
ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம்

By

Published : Apr 1, 2022, 6:31 AM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் லால்சோட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தார். அர்ச்சனா மகப்பேறு மருத்துவராக இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அர்ச்சனா நடத்தும் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி வந்ததையடுத்து, மருத்துவர் அர்ச்சனா பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் பிரசவத்தின்போது உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

கர்ப்பிணி உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மருத்துவர் உருக்கமான கடிதம்: இதையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது லால்சோட் காவல்துறையினர் சட்டப்பிரிவு 302 கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர் அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) தற்கொலையால் உயிரிழந்தார். மேலும், அங்கு அர்ச்சனா எழுதியதாக கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

பாஜக தலைவர் கைது

அதில். அவர், "என் கணவர் மற்றும் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் மரணத்திற்கு பிறகு என் கணவர் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை.

முதலமைச்சர் அசோக் கெலாட் : என் மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்" என்று எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில், "மருத்துவர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று கூறுகிறோம். ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிகளின் உயிரை காக்கவே போராடுகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் உடனே மருத்துவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமில்லை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

gf

பாஜக தலைவர் கைது : உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராடியபோது, ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஜிதேந்திர கோத்வால் உடனிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டது மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜிதேந்திர கோத்வால் மீது காவல்துறையினர் சட்டப் பிரிவு 306 கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து, இன்று(மார்ச் 31) கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கார் பார்க்கிங்கில் பிரச்னை - கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

ABOUT THE AUTHOR

...view details