டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரின் உடல் பத்திரமாக இன்று (ஜூலை 18) டெல்லி கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அவரது உடல் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சித்திக்கின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை பல்கலைக்கழக நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.