மார்பில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைசெய்யப்பட்டது.
குடியரசுத் தலைவரின் உடல்நலம் குணமடைய தலாய் லாமா வாழ்த்து! - ராம்நாத் கோவிந்த்
சிம்லா: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை விரைவில் குணமடைய திபேத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா
இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை விரைவில் குணமடைய திபேத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "ராம்நாத் கோவிந்தை தன்னுடைய பழைய நண்பர் என தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். அவரை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அதில் எனக்குப் பெருமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.