தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவிடம் சுதந்திரம் கேட்கவில்லை... அங்கமாகவே தொடர விருப்பம்... தலாய்லாமா திடீர் பல்டி!

திபெத்திய மக்கள் சுதந்திரத்தை கோரவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாகவும் அல்லது அதிகாரப்பூர்வமற்ற வகையிலும் சீனா தன்னிடம் பேச்சசுவார்த்தை நடத்தி வருவதாகவும் புத்த மத துறவி தலாய்லாமா தெரிவித்தார்.

Dalai Lama
Dalai Lama

By

Published : Jul 8, 2023, 3:35 PM IST

கங்ரா : சீனாவிடம் இருந்து திபெத்திய மக்கள் சுதந்திரம் கோரவில்லை என்றும் தன்னிடம் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரமற்ற வகையிலோ சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புத்த மத தலைவர் தலாய்லாமா தெரிவித்து உள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் செல்ல கங்ரா விமான நிலையத்திற்கு புத்த மத தலைவர் தலாய்லாமா வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திபெத்திய மக்கள் சீனாவிடம் இருந்து சுதந்திரம் கோரவில்லை என்றும் மாறாக சீனாவிடம் திறந்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக கூறினார்.

திபெத்திய மக்களின் மனப்பான்மை மிகவும் வலிமையானது என்பதை சீனா உணர்ந்துள்ளதாக கூறிய தலாய்லாமா திபெத்திய பிரச்சனையை சமாளிக்க சீனா தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார். மேலும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தானும் தயாராக இருப்பதாகவும் திபெத்திய மக்கள் சுதந்திரத்தை கோரவில்லை என்றார்.

சீனா குடியரசின் ஒரு பகுதியாக அடுத்த பல ஆண்டுகளுக்கு இருக்க முடிவு செய்து உள்ளதாக தலாய்லாமா கூறினார். சீனா அதன் நடவடிக்கைகளில் மாறிவிட்டதாக கூறிய அவர் சீனாவில் திபெத்திய அங்கும் குறித்து அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வகையிலோ தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

திபெத்தில் உள்ளூர் மக்கள் மீது சீனா கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி கடந்த 1959ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார். மத்திய அரசு அவருக்கு இமாச்சல பிரதேசத்தில் புகலிடம் வழங்கி வருகிறது. தலாய்லாமா பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், திபெத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அவர் மீது சீனா குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து தலாய்லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதுமுதலே சீனாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தலாய்லாமா பேசி வந்தார். முன்னதாக புத்த மதத்தை விஷமாக கருதும் சீன அரசு பல்வேறு இடங்களில் உள்ள புத்த மடங்களை அழித்ததாக குற்றஞ்ச்சாட்டி இருந்தார். சீன மக்களின் மனதில் இருந்து புத்த மதத்தை வேரோடு அழிக்க சீன அரசு போராடி வருவதாகவும், சீன அரசால் புத்த மதம் பாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் புத்த மதத்தின் மீதான நம்பிக்கை சீன மக்களிடம் இருந்து குறையவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க :Rahul Gandhi : விவசாயிகளுடன் கலந்துரையாடல்... டிராக்டர் ஓட்டி ராகுல் காந்தி மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details