தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுவனிடம் முத்தம் கேட்ட விவகாரம் - தலாய்லாமா மன்னிப்பு கோரினார்! - Dalai Lama apologises for kissing child

சிறுவனுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்ட விவகாரத்தில் புத்த மத துறவி தலாய்லாமா மன்னிப்புக் கோரி உள்ளார்.

DalaiLama
DalaiLama

By

Published : Apr 10, 2023, 2:09 PM IST

தர்மசாலா : திபெத் புத்தமத துறவி தலாய்லாமா, சிறுவனுக்கு உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், தன் தவறுக்கு வருந்துவதாக் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

திபெத் புத்த மத தலைவரான தலாய்லாமா இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தலாய்லாமா ஒரு சிறுவனுக்கு முத்தமிட்டும், தன் நாக்கில் முத்தமிட கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேடையில் அமர்ந்து இருந்த தலாய்லாமாவுக்கு மரியாதை செலுத்த வந்த சிறுவனை, தலாய்லாமா பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தார். தொடர்ந்து வாயிலிருந்து தனது நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதில் முத்தமிடுமாறு வலியுறுத்தி உள்ளார். முதலில் ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக சிறுவன் பின்னே சென்றான்.

ஆனால், தலாய்லாமா சிறுவனின் கையை பிடித்து இருந்ததால், தலாய்லாமாவின் நாக்கில் முத்தம் கொடுத்து அங்கிருந்து சிறுவன் சென்றான். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலாய்லாமாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தலாய்லாமா செய்தது அத்துமீறல் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள பதிவில், சிறுவன், அவனது குடும்பம் மட்டுமின்றி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தனது செயல் காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தலாய்லாமா கூறி உள்ளார். மேலும் பொது இடங்களிலும் கேமிராக்களுக்கு முன்பும் கூட, தான் சந்திக்கும் நபர்களை ஒரு அப்பாவி மற்றும் விளையாட்டுத்தனமான முறையில் கிண்டல் செய்வதாக விளக்கம் அளித்து உள்ளார்.

இது போன்ற சர்ச்சையில் தலாய்லாமா சிக்குவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய தலாய்லாமா என்னுடைய பொறுப்புக்கு ஒரு பெண் வருவதாக இருந்தால் அவர் அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் புத்த மதத்தின் தலைவர் இப்படி பேசலாமா என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு தலாய்லாமா மன்னிப்பு கோரியிருந்தார். தற்போது சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து, நாக்கில் முத்தமிடுமாறு கோரிய சம்பவம் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம் புத்த மத துறவி தலாய்லாமா சீனாவுக்கு எதிரான தொடர் விரோத போக்கில் ஈடுபட்டு வருகிறார். தலாய்லாமாவுக்கும் சீனாவுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க :பிபிசி - ட்விட்டர் மோதல்! "அரசு நிதிஉதவி பெறும் நிறுவனம்" பிபிசி ட்விட்டர் கணக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details