தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய யோகம் யாருக்கு? - அக்டோபர் 6

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

Daily Horoscope
Daily Horoscope

By

Published : Oct 6, 2021, 6:11 AM IST

மேஷம்

சந்தோஷமான செய்தியின் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். அதற்கு, உங்கள் தொழில் அல்லது பணி தொடர்பான செய்தியோ அல்லது நிதி ஆதாயம் தொடர்பான செய்தியோ காரணமாக இருக்கலாம். உங்களது பெயர் தன்மைக்கு ஏற்ற வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று, உங்களுக்குப் படைப்பாற்றல் திறன் அதிகமிருக்கும். நீங்கள் பணி செய்யுமிடத்தில் புதுமைகளைப் புகுத்தி, அதனைச் செயல்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம், பலர் உங்களை விரும்புவார்கள்.

மிதுனம்

இன்றைய நாளில், வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாள்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

கடகம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்கள் காதல் துணையுடன் கடைகளுக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்கப் பணம் செலவழிப்பீர்கள். உங்களது முயற்சியைக் கண்டு மகிழும் உங்கள் காதல் துணையும், அதைவிட பத்து மடங்கு அதிகமாக உங்களுக்குப் பரிசையும் அன்பையும் வழங்குவார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்குச் சிறந்த நாளாக இல்லாமல் இருக்கலாம். அதனால் சிறிது சோர்வாக உணர்வீர்கள். எனினும், முடிந்தவரைத் திறமையாகப் பணியாற்றவும். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு. இன்று, உங்கள் மனத்திற்குப் பிடித்த ஒருவரைச் சந்திப்பீர்கள். பொதுவாக இந்த நாள் ஒரு திருப்தியான நாளாக இருக்கும்.

கன்னி

சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்துகொள்ளும் உங்களது தன்மையின் மூலம் நீங்கள் உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை மகிழவைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்குச் சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.

துலாம்

இன்றைய நாளில், எதிர்பாராத வகையில் பாதிப்புகள் உண்டாகும் சாத்தியம் உள்ளது. எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கவும். சவாலை எதிர்கொண்டால், முடிவில் உங்களுக்குச் சாதகமாக விஷயங்கள் மாறும் வாய்ப்புள்ளது. வேலைப்பளு அதிகம் இருந்தாலும், மாலையில் சந்தோஷமாக இருப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் காதல் துணையுடன் நல்ல வகையில் நேரம் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர். அதை நீங்கள் இன்று அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில் வெற்றிபெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களைப் பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலைகொள்ள வேண்டாம்.

தனுசு

இன்று, வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கவனமாகக் கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம்தான் உங்களது உலகம் ஆகும். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்துசேரும்.

கும்பம்

இன்றைய நாளை, உங்களுக்காகச் செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும் நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம்தான் உங்களுக்குத் தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

மீனம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு, உங்கள் அனுபவத்தின் மூலம், செயல்திறனை நிரூபிக்க இயலும். உங்களை அனைவரும் போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன்மூலம் ஊக்கம் பெறுவார்கள்.

இதையும் படிங்க:காதலியை தினமும் பேச சொல்லுங்கள் - சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்..!

ABOUT THE AUTHOR

...view details