தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Today's Rasi Palan: இன்றைய ராசிபலன் - நவம்பர் 25

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (Today's Rasi Palan) இன்றைய ராசி பலன்களைக் காண்போம்.

Today's Rasi Palan, ராசிபலன், இன்றைய ராசிபலன், நவம்பர் மாத ராசிபலன், DAILY HOROSCOPE
Today's Rasi Palan

By

Published : Nov 25, 2021, 6:20 AM IST

மேஷம்

உங்களது தனிப்பட்ட திறன்கள், உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, வெற்றியை கொடுக்கும். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளியிடுவதன் மூலம் பலம் கிடைக்கும். உங்களது நிதி நிலைமை, மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விபத்துக்கள் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

இன்றைய தினத்தில், உங்கள் மனம் லேசாகவும் நிம்மதியாகவும் உணர்வீர்கள். நீங்கள் உற்சாகம் மிக்கவராக இருக்கலாம் அல்லது பதற்றம் உள்ளவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும், உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மாலையில் நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம்

மற்றவர்கள் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். அனைவரையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கலாம். எனினும், அதற்கான வழி உங்களுக்கு கிடைக்கும். மக்கள் உங்கள் செயல்திறனையும், அறிவுத்திறனையும் போற்றுவார்கள்.

கடகம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது. பொறுமையைக் கடைப் பிடிக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டால், வேலை எளிதாகும். பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

சிம்மம்

இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கன்னி

இன்று, குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன், மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக, சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன், காபி அருந்துவதற்காக, நேரம் செலவழிக்க கூடும்.

தனுசு

சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை, உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக ஆகவும். தேவைப்பட்டால் மனம்திறந்து பேசுவோம். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்

தங்களது வாழ்க்கையில், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முட்டாள்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்துவிட வேண்டாம். உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு இருந்தால், பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

கும்பம்

இன்றைய தினத்தில், நீங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

மீனம்

நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க: Maanaadu Release: தடைகள் தகர்ந்தது ; திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'மாநாடு'

ABOUT THE AUTHOR

...view details