மேஷம்
இன்று இன்னொரு மும்முரமான நாள். அலுவலகத்திலும் பிறகு வீட்டிலும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சிரமத்தை மேற்கொண்டிருப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு சில சலுகைகள் அளிக்கக்கூடும். இது ஓரளவுக்கு உங்களை சாந்தப்படுத்தும். வயதில் மூத்தவர்களிடமிருந்து மதிப்புக்குரிய வழிகாட்டுதல்களை நீங்கள் பெறுவீர்கள்.
ரிஷபம்
உங்கள் நிர்வாகத்திறம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சிறப்பான நாள் இது. பணியிடத்திலோ அல்லது தொழிலோ களத்தில் இறங்கி முழுத் திறமையையும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் சகஊழியர்கள், மேலதிகாரிகள், பங்காளர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்ராயத்தை ஏற்படுத்தி, அவர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதையும் அதிகமாகச் செய்யாதீர்கள். உங்களால் இயன்ற விஷயங்களைத் தாண்டிய விஷயங்களை செய்யாதீர்கள். அது உங்களுக்கே எதிராகத் திரும்பக்கூடும்.
மிதுனம்
இன்று, நீங்கள் மற்றவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைமை தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அன்பினால் இணைக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்கும்.
கடகம்
நெருக்கமான நண்பர்கள், உங்கள் மனப்பான்மையை கண்டு பெருமை கொள்வார்கள். அவர்களுடன் நேரத்தை கழித்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் நீண்ட காலத்திற்கு, நீடித்து இருக்கும்.
சிம்மம்
இன்றைய தினம், சாதக மற்றும் பாதக பலன்களை கொண்டது ஆகும். ஒருபுறம் உங்களது வர்த்தகக் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணை தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருக்கும். மற்றொருபுறம், உங்களது முயற்சிக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்திருக்கும். நண்பரின் அறிவுரையின் காரணமாக நீங்கள் இரு விஷயங்களையும் ஏற்றுக் கொள்வீர்கள்.
கன்னி
உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.