தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு’ - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (செப்-28) அறிவித்தார்.

Etv Bharatமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
Etv Bharatமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

By

Published : Sep 28, 2022, 6:59 PM IST

டெல்லி:மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (செப்-28) நடந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தும் திட்டத்தை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக’ தெரிவித்தார்.

ஜூலை 1, 2022 முதல் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இந்த சமயத்தில் பொருள்களின் விலை அதிகரிப்பதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில் வருகிறது. முன்னதாக மார்ச் 2022ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31ல் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதையும் படிங்க:பிரதமரின் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details