மகாராஷ்டிரா மாநிலம் லால்பாக் கணேஷ் கல்லியில் உள்ள சாராபாய் அடுக்குமாடிக் குடியிருப்பின், இரண்டாவது மாடியில் இன்று (டிச. 06) காலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
மும்பையில் சிலிண்டர் வெடிப்பு: 16 பேர் படுகாயம் - மும்பை வெடிப்பு விபத்து
மும்பை: லால்பாக்கில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் இன்று (டிச. 06) காலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
Cylinder blast at a building in Mumbai
இந்த வெடிவிபத்தில், கட்டடத்திலிருந்த 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் கிங் எட்வர்ட் மருத்துவமனைக்கும், நான்கு பேர் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு