புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. அந்தவரிசையில், ஏப்ரல் 23 ஆம் தேதி(இன்று) இரவு முதல் வரும் 26ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறை வார இறுதி நாட்களில் அமலுக்கு வருகிறது.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), விவசாயம் சார்ந்த பொருட்கள் போக்குவரத்து, வீட்டு விலங்குகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை கடை, விவசாயம் சார்ந்த பணிகள், பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், ஏடிஎம், கேபிள் சர்வீஸ், ஐ.டி., குடிநீர் விநியோகம், மின்விநியோகம், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு உணவு டெலிவரி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.