தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஊரடங்கு ரத்து!

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு புதுச்சேரியில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஊரடங்கு ரத்து!
கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஊரடங்கு ரத்து!

By

Published : Dec 15, 2021, 10:26 PM IST

புதுச்சேரியில்இன்று(டிச. 15) நள்ளிரவு வரை ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுடன் இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தளர்வுகளுடன் ஊரடங்கு

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுக்கடைகள் (மொத்தம் மற்றும் சில்லறை) இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் மற்றும் மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பண்டிகையை ஒட்டி ஊரடங்கு ரத்து

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு ஊரடங்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு அளித்துள்ளது. வரும் 30, 31, 1ம் தேதி இரவு ஊரடங்கு புத்தாண்டை ஒட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவு ஊரடங்கு அதிகாலை 2 மணிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details