தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பனின் இறுதி சடங்கிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்! - Puducherry News

புதுச்சேரியில் நண்பனின் இறுதி சடங்கிற்கு சென்ற இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

அஜித்
அஜித்

By

Published : Nov 16, 2020, 9:21 AM IST

Updated : Nov 16, 2020, 11:29 AM IST

புதுச்சேரி முத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (நவ. 14) இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது இறுதி சடங்கு நேற்று (நவ. 15) மாலை சாணரபேட்டை இடுகாட்டில் நடந்தது. இதில் அஜித் கலந்துகொண்டார்.

பின்னர் அருகில் உள்ள மதுக்கடையில் மது வாங்கி வந்து இடுகாடு அருகே அவரது நண்பர்கள் மூன்று பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் குடித்துக்கொண்டிருந்த அஜித்தை அழைத்து நீ தான் அஜித்தா? உனது ஊர் முத்திரபாளையம் காந்திருநல்லூர்தானே என கேட்டுள்ளனர். ஆமாம் ஆனால் உங்களை எனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.


பின்னர் 4 பேரும் எடுத்து வந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகினர். இதனால் சம்பவ இடத்திலேயே அஜித் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து அஜித்துடன் மது அருந்திய நண்பர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அஜித்தின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:மது அருந்த சென்ற இடத்தில் தகராறு... விசைத்தறி தொழிலாளி கொலை!

Last Updated : Nov 16, 2020, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details