கண்ணூர் (கேரளா): சுண்டா கண்ணபுரம் பகுதியைச் சார்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர், இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மீது பணமோசடி புகார் அளித்துள்ளார். அதில், ஸ்ரீசாந்த் மற்றும் அவர்களது நண்பர்களான ராஜீவ் குமார் (50), வெங்கடேஷ் ஜினி (43) ஆகியோர், தன்னிடம் இருந்து கடந்த 2019ஆம் அண்டு 18.7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலம் கொல்லூர் பகுதியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்று கட்டுவதாகவும், அதில் தன்னையும் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாகவும் கூறி பணத்தைப் பெற்றதாகவும், தற்போது வரை எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஸ்ரீகாந்த், கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது, தான் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக போட்டியாளர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சாவா ஆகியோருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
அதற்காக, இந்திய அணியின் முன்னார் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை வாழ்நாள் முழுவதும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கு பிசிசிஐ தடை விதித்தது. வாழ்நாள் முழுவதும் விதிக்கப்பட்ட தடை, கடந்த 2019ஆம் ஆண்டு 7 ஆண்டு தடையாக குறைக்கப்பட்டது.
பின்னர், 2021ஆம் ஆண்டு செய்யது முஸ்தாக் அலி கோப்பைக்காக, கேரள அணியில் இடம் பெற்று இருந்தார். மேலும், 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளும் அவரை எந்த அணி நிர்வாகத்தினரும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்!