தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Corona Update: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா, ஒமைக்ரான் ... - இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா, ஒமைக்ரான்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 833 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா, கொரோனா பாதிப்பு லட்சம், லட்சமாக அதிகரிப்பு
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா,கொரோனா பாதிப்பு லட்சம், லட்சமாக அதிகரிப்பு

By

Published : Jan 15, 2022, 10:37 AM IST

டெல்லி: நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் தொற்றால் 6,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றிலிருந்து, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 4ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 402 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக உள்ளது.

நாடு முழுவதும் இது வரை 156.02 கோடி மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 லட்சத்து பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா; மீண்டும் ஊரடங்கா?

ABOUT THE AUTHOR

...view details