டெல்லி: டெல்லியில் நேற்று (ஜன.12) 27 ஆயிரத்து 561 கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். கடந்த ஏப்ரலில் இதேபோல் அதிக பாதிப்புகள் (28,395) ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 102 பேருக்கு கரோனா பாதிப்புகள் பரிசோதிக்கப்பட்டன. இதற்கிடையில் நேற்று முன்தினம் (ஜன.11) ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர்.
ஆக ஒட்டுமொத்த பாதிப்பு 25 ஆயிரத்து 240 ஆக உள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 264 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 439 படுக்கைகள் காலியாக உள்ளன.
டெல்லியில், முதல் தடுப்பூசி டோஸ் எடுத்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,61,18,429 ஆகவும், இரண்டாவது தடுப்பூசி டோஸ் இதுவரை பெற்றவர்களின் எண்ணிக்கை 1,17,48,218 ஆகவும் இருந்தது. டெல்லியில் ஒரே நாளில் 41,437 நபர்களுக்கு டோஸ் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க :நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா!