டெல்லியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 10 நாட்களில் 32 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நேற்றைய நிலவரப்படி 2,146 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் தொற்று விகிதம் 17.83 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 8,205ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்... மீறினால் ரூ.500 அபராதம்... - டெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்
டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் முகக் கவசம் மீண்டும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக 11) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் அலுவலகம், பூங்கா, மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சொந்த காரில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அபராதம் பொருந்தாது. இதனை மீறபவர்களுக்கு ரூ. 500 அபாராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்... கட்டணம் குறையுமா..? அதிகரிக்குமா..?