ஒடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிம்ஸ் கோவிட் மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் நிர்வாணமாக மருத்துவமனை கழிவறை அருகில் கிடத்தப்பட்டிருப்பது, நோயாளிகளின் படுக்கைகளில் தட்டு உள்ளிட்ட பாத்திரங்கள் இறைந்து கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாணமாக கழிவறை அருகே கிடத்தப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகள்: அதிர்ச்சி வீடியோ! - கிம்ஸ் கோவிட் மருத்துவமனை ஒடிசா
ஒடிசா: கரோனா நோயாளிகள் நிர்வாணமாக மருத்துவமனை கழிவறைகளின் அருகில் கிடப்பது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கிம்ஸ் கோவிட் மருத்துவமனைக்கு, கரோனா நோயாளி ஒருவரைப் பார்க்க அவரது உறவினர் ஒருவர் சென்றபோது, மருத்துவமனையின் நிலையைக் கண்டு அதிர்ந்து இந்த வீடியோவை எடுத்து அவர் வெளியிட்டுள்ளதாக இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னதாக அம்மாவட்ட ஆட்சியர், கிம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் அங்கிருந்த கரோனா நோயாளிகளுடன் பேசிய அவர், மருத்துவமனையில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.