தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2020, 8:06 AM IST

ETV Bharat / bharat

கரோனா பரவல்: சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Covid-19: Guidelines for devotees visiting Kerala's Sabarimala
Covid-19: Guidelines for devotees visiting Kerala's Sabarimala

உலகையே ஆட்கொண்ட கரோனா வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவில் குறைந்துவருகிறது. இருந்தபோதிலும் தற்போது கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 'பக்தர்கள் வருகைக்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அங்கு பரிசோதிக்கப்பட்டுதான் அனுப்பப்படுவார்கள். அப்படி பரிசோதிக்கும் போது, பயணம் மேற்கொள்ள தகுதி இல்லையென்றால், திருப்பி அனுப்பப்படுவார்கள்.

மேலும், மலையின் மேல் ஏறும் போதும், கீழ் இறங்கும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசங்களை அணிவது கட்டாயம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சிட்டுக்குருவிகளின் காதலன்!

ABOUT THE AUTHOR

...view details