டெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் வார இறுதி நாள்கள், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717ஆக உள்ளது.