தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழப்பு!

By

Published : May 13, 2021, 3:00 PM IST

நேற்று (மே.13) ஒரே நாளில் மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 I
கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 37 லட்சத்து மூன்றாயிரத்து 665ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று (மே.12) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,120 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 317ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 823ஆக உள்ளது.

தற்போது 37 லட்சத்து 10 ஆயிரத்து 525 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 17 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஜான்சன் & ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசி: சாதகம் பாதகம் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details