இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 421 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 938ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (மே.11) மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 205 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 197ஆக அதிகரித்துள்ளது.