டெல்லி:நாட்டில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 576ஆக உள்ளது. இதையடுத்து இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 லட்சத்து 58 ஆயிரத்து 483ஆக உள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 83.83 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து, 43 ஆயிரத்து 303ஆக உள்ளது. இதனால் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடு 93.58ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4.95 விழுக்காடாகவும் உள்ளது.
நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்ட 585 பேர் உயிரிழந்ததையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 578ஆக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.47 விழக்காடாக உள்ளது.
ஐசிஎம்ஆர் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 28 ஆயிரத்து 203 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை மொத்தமாக 12 கோடியே 85 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும் தெரிகிறது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: நிலம், நீர், சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் புற ஊதாக் கதிர்கள் கிருமிநாசினி இயந்திரம்!