நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 181 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
கோவிட் - 19 நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஐந்து லட்சத்து 57 ஆயிரத்து 986 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 826 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 274 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். தொடர்ந்து 23ஆவது நாளாக நாட்டில் கோவிட்-19 காரணமாக உயிரிழப்பு 300க்கும் குறைவாக உள்ளது. அதேபோல் தொடர்ந்து எட்டு நாளாக நாட்டின் புதிய பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
பரிசோதனை நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 90 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 18 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரத்து 491 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எம்ஜிஆரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!