நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 881 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 101 ஆக உள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 50 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 845 ஆக உள்ளது.