தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

43 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் புதிதாக 43 ஆயிரத்து 733 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

COVID
COVID

By

Published : Jul 7, 2021, 10:28 AM IST

டெல்லி: நாட்டில் கோவிட் பாதிப்பாளர்கள் குறித்த தகவலை புதன்கிழமை (ஜூலை 7) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

அதில், “நாட்டில் புதிதாக 43 ஆயிரத்து 733 பேருக்கு கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் நாட்டில் 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 665 பேர் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுவரை மருத்துவமனைகளில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்புகள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 211 ஆக உள்ளன. நேற்று மட்டும் 930 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

புதிதாக தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது. அதேநேரம் கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைவோர் எண்ணிக்கையும் 97.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் நாடு முழுக்க 19 லட்சத்து 7 ஆயிரத்து 216 சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் இதுவரை 42 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 97 பேருக்கு கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனா நிலவரம்: இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details