தமிழ்நாடு

tamil nadu

மும்பையில் தடுப்பூசி காலியாகும் அச்சத்தில் முந்தியடித்த மக்கள் கூட்டம்

மும்பை: கோரேகானில் உள்ள நெஸ்கோ தடுப்பூசி மையத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏராளமானோர் ஒரே நேரத்தில் முந்தியடித்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

By

Published : Apr 30, 2021, 10:41 AM IST

Published : Apr 30, 2021, 10:41 AM IST

COVID-19
தடுப்பூசி

நாடு முழுவதும் கரோனா 2 ஆம் அலை உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுத்திட மே 15 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று(ஏப்ரல்,29), கோரேகானில் உள்ள நெஸ்கோ தடுப்பூசி மையத்தில், பதிவு செய்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மையத்தில், மொத்தம் 4,500 தடுப்பூசிகள் கைவசம் இருந்தன. சுமார் 3,500 பேர் தடுப்பூசி செலுத்திடப் பதிவு செய்திருந்தனர்.

தடுப்பூசி காலியாகிவிடும் அச்சத்தில் முந்தியடித்த மக்கள் கூட்டம்

இருப்பினும், தடுப்பூசி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் அச்சத்தில், மையத்தின் கதவைத் திறந்ததும், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் ஓடோடி வந்தனர். பின்னர், அலுவலர்கள் போதுமான அளவு தடுப்பூசி இருப்பதை அவர்களுக்குப் புரியவைத்தனர். பின்னர், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மூத்த குடிமக்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், மக்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'கர்நாடகா பெண்ணின் விழிப்புணர்வூட்டும் செயல்'

ABOUT THE AUTHOR

...view details