மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில், இன்று (ஏப்.09) நடைபெறும் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 24ஆவது கூட்டத்தில், கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கரோனா சூழல் குறித்து ஹர்ஷ் வர்தன் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை - கரோனா
இந்தியாவில் கரோனா பரவலின் நிலை, வரும் நாள்களில் தடுப்பூசி விநியோகிப்பதில் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையிலான கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.
ஹர்ஷ் வர்தன்
இந்தியாவில் கரோனா பரவலின் நிலை, உலகம் முழுவதிலுமான கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், சர்வதேச சூழ்நிலைகள், எதிர்வரும் நாள்களில் தடுப்பூசி கிடைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மம்தாவின் கோட்டையில் களமிறங்கும் அமித்ஷா!