தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Dec 29, 2020, 2:44 PM IST

உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் பின்வருமாறு :

கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச.28) ஒரேநாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 153ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்து ஏழாயிரத்து 569ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.92 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16ஆம் தேதி 50 லட்சத்தையும், 28ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11ஆம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது. 29ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20ஆம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது.

இதுவரை மொத்தமாக 16 கோடியே 98 லட்சம் ஓராயிரத்து 749 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிச.28) மட்டும் 9 லட்சத்து 83 ஆயிரத்து 695 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details