தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2021, 11:49 AM IST

ETV Bharat / bharat

தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்நாடு!

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

corona
கரோனா தொற்று

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பரவல் வேகம் குறையாமல் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details