முன்னதாக, சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜகதீப் சோக்கர் ஆகியோர் வக்கீல் பிரசாந்த் பூஷண் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரேஷன், உணவு பாதுகாப்பு குறித்து தொடர்ந்த மனுக்கள், இன்று (ஜூன்.29) நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதில், கரோனா இரண்டாவது அலையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு, பொது முடக்கம் காரணமாக மீண்டும் துயரத்தை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, பணப் பரிமாற்றம், பிற நலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதை உறுதி செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்நிலையில், வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமைப்புசாரா துறைத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) உதவியுடன் ஒரு இணையதளத்தை உருவாக்குமாறு நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கரோனா காலம் முடியும்வரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சமுதாய உணவுக்கூடங்களை உருவாக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உணவு தானியங்களை அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவு!