டெல்லி: தொழிலதிபா் மனைவியிடம் 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷின் மனைவி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டார். இந்த பண மோசடி தொடர்பாக சுகேஷுடன் நெருங்கிய நட்பில் இருந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். அதேபோல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜாமீன்கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி ஜாக்குலின் மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 10ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:வெடிக்கும் ஆடை பஞ்சாயத்து - சதீஷின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் தர்ஷா குப்தா