தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய மொழிகள் மாநாட்டில் இடம்பெறும் வள்ளுவனின் திருக்குறள்! - literary conference in Mumbai

மும்பையில் நடைபெறவுள்ள பல்வேறு இந்திய மொழிகளின் மாநாட்டில் திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிய சிறப்பு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

மும்பை மாநாட்டில் இடம்பெறும் வள்ளுவனின் திருக்குறள்...!
மும்பை மாநாட்டில் இடம்பெறும் வள்ளுவனின் திருக்குறள்...!

By

Published : Oct 13, 2022, 11:00 AM IST

மகாராஷ்டிரா(மும்பை): மும்பையில் ஏறத்தாழ 23 ஆண்டுகள் கழித்து பல இந்திய மொழிகள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற அக்.15 & அக்.16 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்த இலக்கிய மாநாட்டில் தமிழ், வங்காளம், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளின் தலை சிறந்த கவிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். தஞ்சை வரைப் பரவியிருந்த மராட்டிய ராஜ்ஜியத்தால் நம்மின் பல கலாசார பண்பாடுகள் அவர்களோடு கலந்து இருப்பதைக் காணலாம்.

மாராட்டிய மொழியில் உள்ள பல தமிழ் வார்த்தைகளும் இந்தத் தொடர்புக்கு ஓர் ஆதாரம். இதுகுறித்து மகாராஷ்டிரிய எழுத்தாளரான விஸ்வநாத் கைரே கூறுகையில், 'மராட்டி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகள் சேர்ந்தால் புதிய பண்பாடு ஒன்று உருவாகலாம்’ என்றார். இந்த மாநாட்டில் தொடர்ந்து மூடப்பட்டு வரும் மராட்டிய பள்ளிகளை திறப்பது குறித்தும் ஓர் சிறப்பு கலந்துரையாடல் செய்யவுள்ளனர்.

மேலும், அன்று மகாத்மா பூலேவின் 150ஆவது பிறந்த நாள் வருகிறது. அதுமட்டுமின்றி அம்பேத்கர் எழுதிய ‘ரூபாயின் பிரச்னை’ புத்தகம் வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் குறித்தும் இந்த மாநாட்டில் ஓர் சிறப்பு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் சிந்தனைகளோடு உலகத்தாரால் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் வள்ளுவனின் திருக்குறள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் இந்த இந்திய மொழிகள் மாநாட்டில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் அர்த்வியூ வரதராஜன் கூறுகையில், “இந்த மாநாட்டின் ஓர் சிறப்பு அம்சமாக இது ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் நடைபெறவுள்ளது. அதில், திருவள்ளுவர் பெயரில் ஒரு அரங்கும், மகாத்மா பூலேவின் பெயரில் ஒரு அரங்கும், அம்பேத்கர் பெயரில் ஒரு அரங்கும் என மூன்று ஹால்களில் ஒரே நேரத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தற்காலத்து எழுத்தாளரான மதன் கார்க்கியும் கலந்துகொள்ளவுள்ளார். அனைத்து மொழிகளையும், கலாசார அடையாளங்களையும், பாதுகாத்து தாய் மொழியில் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

இதையும் படிங்க: டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள்

ABOUT THE AUTHOR

...view details