புதுச்சேரி, ஏனாம் பிராந்தியத்திற்கு உள்பட்ட சில தீவுகளில் சமூக விரோதிகள் சிலர் கள்ளச்சாராயம் தாயரித்து வருகின்றனர். இதுகுறித்து அவ்வப்போது காவல் துறையினருக்கும் கலால் துறையினருக்கும் ரகசியத் தகவல் கிடைத்து வரும் நிலையில், அங்கு சென்ற சாராயத்தை கைப்பற்றி அழித்து வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
அந்த வகையில், திரிலாடிட்பா பகுதியில் படகுகள் மூலம் கள்ளச்சாராயம் கடத்தப்படவிருப்பதாக காவல் துறையினருக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், படகு ஒன்றில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.