தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள்! - கொவிட்-19 தடுப்பூசிகள்

நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

vaccine
vaccine

By

Published : Feb 13, 2021, 6:02 PM IST

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரை 80 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. நேற்று வரை (பிப்.13), தமிழகத்தில் 2,27,542 பேர், புதுச்சேரியில் 5,510 பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 80 லட்சம் பேருக்கு (79,67,647) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 28-வது நாளில் 94,160 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 10,411 முன்கள ஊழியர்களுக்குமாக மொத்தம் 4,62,637 பயனாளிகளுக்கு, 10,411 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 8 மாநிலங்களில பதிவு செய்த சுமார் 60% (59.70%) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த பயனாளிகளில் 10.8 சதவீதத்தினர் (8,58,602), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவுக்கான சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,571 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.25 சதவீதம் மட்டுமே ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.06 கோடியாக (1,06,00,625) அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 97.32 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, கேரளாவில் அதிகபட்சமாக 5,397 பேரும், மகாராஷ்டிராவில் 3,670 பேரும், தமிழ்நாட்டில் 483 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 103 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details