கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தும்மல் மூலம் தொற்று அதிகமாக பரவும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பேசினாலும் பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், மேலும் கருப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை என பூஞ்சைகளின் தாக்கம் அதிகரிப்பதால் பாதிப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்தநிலையில், பேச்சின் மூலம் தொற்றுப் பரவும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, அதற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில், “கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போது வெளிவரும் எச்சிலின் பெரிய துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்திற்குள் விழுந்து விடும். ஆனால் சிறிய துகள்களான ‘ஏரோசோல்கள்’ 10 மீட்டர் வரை பரவலாம்.