தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

12-14 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம் - முதல் நாளிலில் 2.6 லட்சம் பயனாளிகள்

விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் 12-14 வயதினர் சுமார் 2.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

Covid vax
Covid vax

By

Published : Mar 17, 2022, 12:41 PM IST

Updated : Mar 17, 2022, 12:56 PM IST

நாட்டின் கோவிட் தடுப்பூசி திட்டம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 12 முதல் 14 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று முதல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் 12-14 வயதினர் சுமார் 2.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி தினமான நேற்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

12-14 வயதினருக்கு பயாலஜிக்கல் இ Corbevax தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்த திட்டம் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த வயதில் சுமார் 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டில் இதுவரை மொத்தம் 180 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 96 கோடியே 97 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 81 கோடியே 73 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடியே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஐஐடிகளில் 4,300 காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்

Last Updated : Mar 17, 2022, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details