ஆந்திரா:கிருஷ்ணா மாவட்டத்தில் 15 வயது சிறுவனை கடந்த 19 ஆம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவனை பெண்மணி ஒருவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிறுவனின் எதிர் வீட்டில் வசித்து வந்த 30 வயதான ஸ்வப்னா என்ற பெண்மணி, சிறுவனுக்கு ஆபாசப் படங்களை காட்டி, அவனுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், பின்னர் சிறுவனை மூளைச் சலவை செய்து, கடத்திச் சென்று ஹைதராபாத்தில் தங்கியிருந்தாகவும் தெரிகிறது.