புதுச்சேரி: துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது, அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் டெபுடேசன் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுகிறது, அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் பல ஊழியர்கள் அவர்களது பணிக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களை கிரண் பேடி மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்ததுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்து கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.