தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: கோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளிக் கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

fdsa
fdsa

By

Published : Jul 22, 2021, 12:25 AM IST

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 21ஆவது வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டத்தில் தலைமை செயலர் அஸ்வின் குமார், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரியில், இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்காரியது. அந்த முயச்சிகளுக்காக சுகாதாரத் துறையைப் பாராட்டுகிறேன்.

கோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளிக் கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும்.

அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவர்கள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிச் செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ளவதற்கான அடிப்படைத் தயாரிப்புகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசிப் போடுவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details