தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக ரெடி, காங்கிரஸ் முட்டுக்கட்டை- சிவ் பிரதாப் சுக்லா

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பாஜக அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் காங்கிரஸ் முரட்டுத் தனத்தை உருவாக்கி முட்டுக்கட்டை போட விரும்புகிறது, அவை நடவடிக்கைகளை நிறுத்துகிறது என பாஜக எம்பியும் மாநிலங்களவை தலைமை கொறடாவுமான சிவ் பிரதாப் சுக்லா கூறினார்.

Shiv Pratap Shukla
Shiv Pratap Shukla

By

Published : Jul 29, 2021, 10:15 AM IST

டெல்லி : பாஜக எம்பியும் மாநிலங்களவை தலைமை கொறடாவுமான சிவ் பிரதாப் சுக்லா, ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் அனாமிகா ரத்னாவிற்கு அளித்த பேட்டியில், “உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது, ஆனால் காங்கிரஸ் விரும்பவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “கரோனா போன்ற விஷயங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் பதிலளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது, இருப்பினும், அறிவிப்பு கொடுத்த பிறகும் காங்கிரஸ் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

மீண்டும் யோகி ஆட்சி

அதேபோல், சில எதிர்க்கட்சிகளுடன் காங்கிரசும் பதில்களை விரும்பவில்லை, ஆனால் நன்கு படித்திருந்தாலும், முரட்டுத்தனத்தை உருவாக்க விரும்புகிறது. அவர்கள் நாடாளுமன்ற கௌரவத்தை கேலி செய்கிறார்கள்” என்றார்.

இதைத்தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் குறித்து சுக்லா கூறினார். அப்போது அவர், “2022 ஆம் ஆண்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசாங்கம் ஆட்சி அமைக்கப்படும். மக்கள் எங்களோடு நிற்பார்கள்” என்றார்.

2024 மக்களவை தேர்தல்

சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்திப்பு குறித்து கூறுகையில், “2024இல் எதிர்க்கட்சிகள் எந்தவொரு வேட்பாளரை நிறுத்தினாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்” என்றார்.

இதையும் படிங்க :தலிபான்கள் சாதாரண குடிமக்கள்- இம்ரான் கான்

ABOUT THE AUTHOR

...view details