தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரின் ‘பிளாக் மேஜிக்’ பேச்சு - காங்கிரஸ் பதிலடி! - Congress

பிரதமர் மோடியின் ‘பிளாக் மேஜிக்’ என்ற பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

பிரதமரின் ‘பிளாக் மேஜிக்’ கருத்துக்கு காங்கிரஸார் பதிலடி!
பிரதமரின் ‘பிளாக் மேஜிக்’ கருத்துக்கு காங்கிரஸார் பதிலடி!

By

Published : Aug 11, 2022, 6:55 AM IST

ஹரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி, அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, சிலர் எப்படி 'பிளாக் மேஜிக்' செய்ய முயன்றார்கள் என்பதைப் பார்த்தோம்.

கருப்பு உடை அணிந்தால் தங்கள் அவநம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவ்வாறான மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுங்கள்” என எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக விலைவாசி உயர்வைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கு உள்ளே மற்றும் வெளியே கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் ‘பிளாக் மேஜிக்’ பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நரேந்திர மோடி அவர்களே, அங்கும் இங்கும் பேசாதீர்கள். பணவீக்கத்தை அதிகரித்து ஏன் கொள்ளையடித்தீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள். கருப்பு ஆடைகளால் பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் தலைமை குறித்து அவர்களுக்கு கேள்விகள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், “கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அவர்கள் கருப்பு உடைகள் பற்றி அர்த்தமற்ற பிரச்னையை உருவாக்குகிறார்கள். அவர்களின் பிரச்னைகளைப் பற்றி பிரதமர் பேச வேண்டும் என்று நாடு விரும்புகிறது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹரியானா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா, “முதுகை உடைக்கும் பணவீக்கத்தின் கருமேகங்கள்! வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தின் கருமேகங்கள்! மூழ்கும் பொருளாதாரத்தின் மீது கருமேகங்கள்! வீழ்ச்சியடைந்த ரூபாயின் கருமேகங்கள் - மூடப்பட்ட வணிகம்! கருமேகங்கள் முடங்கிக் கிடக்கும் தொழில்கள் மீது வட்டமிடும் கருமேகங்கள்! எதிர்க்கட்சிகளைத் திட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் பரப்பிய இருளைப் பற்றி பேசுங்கள்” என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் ஜவுளி தொழில் நலிவடைந்துவிட்டது - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details