தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காரசார விவாதம்.. பிரதமர் மவுனவிரதம் கலைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளில் பிரதமர் மோடியின் மவுன விரதத்தை கலைக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.

Gaurav Gogoi
Gaurav Gogoi

By

Published : Aug 8, 2023, 12:40 PM IST

Updated : Aug 8, 2023, 1:36 PM IST

டெல்லி :பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகாய் மக்களவையில் முன்வைத்தார்.

மணிப்பூரில் நிலவும் வன்முறைச் சம்பவங்கள், இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது, அரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் வெடித்த கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், பிரதமர் மோடியின் மவுனத்தை உடைக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எண்களை பற்றியது அல்ல என்றும் மாறாக மணிப்பூர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பற்றியது என்று கூறினார்.

அரசின் மீதான நம்பிக்கையின்மையே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கலுக்கான காரணம் என்று கவுரவ் கோகாய் தெரிவித்தார். மணிப்பூருக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி கொண்டு வந்து உள்ளதாகவும், மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கவுரவ் கோகாய் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பேசுவதை பிரதமர் மோடி தவிர்த்து வருவதாகவும் அவரது மவுன விரதத்தை கலைக்க வேண்டும் என்ரு கவுரவ் கோகாய் கூறினார். கலவரம் பாதித்த மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை உள்ளிட்ட மூன்று கேள்விகளை பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதாக கவுரவ் கோகாய் தெரிவித்தார்.

இறுதியாக மணிப்பூர் குறித்துப் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு 80 நாட்கள் ஆனது ஏன் என்றும், அவர் பேசும் போது வெறும் 30 விநாடிகள் மட்டுமே ஆனதாகவும் கோகோய் கூறினார்.

முன்னதாக காலை 11 மணிக்கு அவை தொடங்கிய நிலையில், நியூஸ் கிளிக் விவகாரம் குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் கருத்துகளின் ஒரு பகுதி மீண்டும் மக்களவை பதிவுகளில் இணைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சபையில் எந்தவொரு நடவடிக்கைக்கும் தலைமை தாங்கும் ஒருவர், எந்த முடிவையும் எடுக்க முழு அதிகாரம் பெற்றவர் என்று கூறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபையை அமைதியான முறையில் நடத்த உறுப்பினர்களுக்கு ஆர்வம் உள்ளதா என கேள்வி எழுப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது என்றும், ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை நடத்த விரும்பவில்லை போலும் என்று கூறினார். தொடர்ந்து 12 மணி வரை அவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க :மக்களவை முடங்கியது.. நியூஸ் கிளிக் விவாகாரம்.. நிஷிகாந்த் எம்.பி கருத்துக்கு எதிர்க்கட்சிகள் போராட்டம்.. அமளி!

Last Updated : Aug 8, 2023, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details