நாட்டில் இரண்டாம் அலை தீவிரமடையும் நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை நடத்த உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி நேற்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களை முட்டாளாக்கி வருவதாகவும் தனது அடிப்படைக் கடமைகளில் இருந்து அரசு தவறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவிட் தொடர்பாக ஆலோசனை: கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
கரோனா இரண்டாம் அலை தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி வரும் பத்தாம் தேதி கூடுகிறது.
காங்கிரஸ்
தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள சோனியாகாந்தி அரசியல் வேறுபாடுகளை கடந்து கரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய காலம் இது. இந்த இக்கட்டான சூழலில் நாடு உரிய அரசியல் தலைமை இல்லாமல் தவிக்கிறது என கவலை தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் முடிவில் வரும் பத்தாம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.