ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுடன், பல இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தமோஹ் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
ம.பி. இடைத்தேர்தல்: ஆளும் பாஜகவை வீழ்த்தி காங். வெற்றிமுகம் - மத்தியப் பிரதேச தமோஹ் சட்டமன்றத் தேர்தல்
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர் ராகுல் சிங் இடைத்தேர்தலில் தோல்வி முகத்தில் உள்ளார்.
Congress
இதில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் டான்டன் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து நின்ற ஆளும் பாஜக வேட்பாளர் ராகுல் சிங் பின்னடைவைச் சந்திக்கிறார்.
காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு மாறிய ராகுல் சிங், தற்போது இடைத்தேர்தலை இவர் சந்தித்த நிலையில் தோல்வி முகத்தில் உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.