தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு அளிக்கத் தயார்: காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் அதிரடி! - ரங்கசாமியுடன் இணைந்து போராட காங்கிரஸ் தயார்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் போராட தயார் என வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் காங்கிரஸ் போராட தயார் - வைத்திலிங்கம் எம்பி
புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் காங்கிரஸ் போராட தயார் - வைத்திலிங்கம் எம்பி

By

Published : Dec 19, 2022, 11:19 AM IST

Updated : Dec 19, 2022, 11:37 AM IST

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் பிறந்தநாள் விழாவில் வைத்திலிங்கம் எம்பி பேச்சு

புதுச்சேரி:முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் பிறந்தநாள் விழா, காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைத்திலிங்கம் எம்பி, "மாநில அந்தஸ்துக்காக பாஜக கூட்டணியை விட்டு ரங்கசாமி வெளியே வர தயாரா? ரங்கசாமி தலைமையை ஏற்று போராட காங்கிரஸ் தயார்" என கூறினார். இது புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பு முனையை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த எம்எல்ஏ நேரு தலைமையிலான சமூக அமைப்புகள், தனி மாநில அந்தஸ்து தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து அவர்களிடத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித முடிவையும் அறிவிப்பையும் சொல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது எனவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"நானே மன உளைச்சலில் இருக்கிறேன்" - முதலமைச்சர் ரங்கசாமி

Last Updated : Dec 19, 2022, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details