தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி பலமாக இருக்கிறது - நாராயணசாமி! - puducherry district news

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/07-March-2021/10907983_pud.mp4
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Mar 7, 2021, 4:56 PM IST

தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ள நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச்7) தொடங்கியது. வைசியாள் வீதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”இந்த பேச்சுவார்த்தையில் சில கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு தெரிவித்து முடிவு செய்யப்படும்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பின்னர் தெரிவிக்கப்படும். புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பிரச்சினை அவர்களது விவகாரம் அதில் பதில் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ர‌யில் முன் பாய்ந்து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ ஊழிய‌ர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details