தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் பவுன்ஸ்.. காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆனதால் மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் செல்லாது.. காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் செல்லாது.. காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

By

Published : Nov 27, 2022, 10:12 AM IST

லக்கிம்பூர் கேரி (உத்தரபிரதேசம்): லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள நிகாசனில், கடந்த செப்டம்பர் 14 அன்று இரண்டு இளம் தலித் சகோதரிகள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாநில காங்கிரஸ் பிரமுகர்களான வீரேந்திர குமார், ஒய்.கே.ஷர்மா மற்றும் அமித் ஜானி ஆகியோர் நிதியுதவி அளிக்கும் விதமாக காசோலைகளை வழங்கி உள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பவுன்ஸ் ஆனதால், நிதியுதவியைப் பெற முடியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காசோலைகள் பவுன்ஸ் ஆனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், நிதியுதவி அளித்த மூன்று காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்பி அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரகலாத் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள் - விசாரணை காவலில் நால்வர்

ABOUT THE AUTHOR

...view details