டெல்லி : ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதி, முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் இஸ்ரேலின் தனியார் நிறுவனத்தின் உளவு மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 300 பேர் இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனத்தின் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலே எதிரொலித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.